தை முதல் நாளே வாட்டியெடுத்த 'வெயில்'

தை முதல் நாளே வாட்டியெடுத்த 'வெயில்'

Published:Updated:
தை முதல் நாளே வாட்டியெடுத்த 'வெயில்'
தை முதல் நாளே வாட்டியெடுத்த 'வெயில்'
0Comments
Share

"பொங்கலோ பொங்கல்' என்று படு உற்சாகமாக நேற்று உழவர் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்த ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களும் மறக்காமல்  இன்னொரு வார்த்தையையும் கொஞ்சம் மிரட்சியுடன் சொன்னார்கள். அது, "ப்பா, என்னா வெயிலு" என்பதுதான்.  நேற்று  புது வெயில் அடித்து, ஒரு காட்டுக் காட்டியது.  அதனால்தான், சூரியனை வரவேற்கும் முகமாக, தமிழர்கள் பொங்கல் படையலிட்டு வழிபடுகிறார்கள். இது எல்லோருமே அறிந்த விசயம்தான். ஆனால், நேற்று அடித்த 'சுள்'ளென்ற வெயில், எல்லோருக்குமே புதிது. "சூரியன் சுமாராக ஆரம்பித்து போகப்போகத்தான் உக்கிரமாக மாறும். ஜனவரியில், எப்போதுமே இதமான வெயில்தான் அடிக்கும். பிப்ரவரிக்குப் பிறகுதான் தன்னோட வேலையைக் காட்டும். ஆனால், நேற்று வெயில் கொஞ்சம் கொளுத்திதான் எடுத்தது. இப்பவே இப்படீன்னா, இன்னும் போகப்போக எப்படி இருக்குமோ தெரியவில்லை" என்று பொதுமக்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

நேற்று பொங்கல்வைக்கும் மும்முறத்தில் இருந்த பெண்கள்கூட, வாசலில், மொட்டை மாடியில் சூரியனுக்கு படையலிட்டபோது, கடும் வெயில் அடிப்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். பண்டிகைக் கால சிறப்புப் பேருந்துகளை ஓட்டிய ஓட்டுநர்களும் நடத்துநர்களும் "என்னப்பா, இன்னிக்கு வெயில் இப்படி கொளுத்துது" என்று மிரண்டிருக்கிறார்கள். பயணிகளும் அதை ஆமோதித்து தங்கள் நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்துச் சுண்டிய சம்பவங்களும் தமிழ்நாட்டின் பல முக்கியப் பேருந்து நிலையங்களில் நேற்று நடந்தது. இன்னும் சிலர், "அப்படி ஒன்றும் கடுமையான வெயிலெல்லாம் அடிக்கவில்லை. மூன்று வாரங்களாகவே தமிழ்நாட்டில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. அந்தக் குளிரிலிருந்துட்டு வெயில்ல போகும்போது, அதிகமாக இருப்பதுபோல 'ஃபீல்' ஆகுது. ஆனால், எப்போதும் அடிக்கிற வெயில்தான் இப்போதும் அடிக்கிறது" என்றார்கள். ஆனால், ஒன்று மட்டும் உண்மை. தைத்திங்கள் முதல்நாளே மக்களை சூரியன் 'தெறிக்க' வைத்துள்ளது.