சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்

அதானி ரயில் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறது!

தொகுப்பு: ரா.இல்யாஸ் முகமது, இன்போகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

Published:Updated:
train
பிரீமியம் ஸ்டோரி
train
Comments
Share

ச்சைக்கொடி காட்டிவிட்டது பா.ஜ.க அரசு. சேரன் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஓடும் ரயில்தடங்களில் இனி அம்பானி எக்ஸ்பிரஸ், அதானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடலாம்.அசுரபலத்தில் அரியணை ஏறியதும் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய பா.ஜ.க அரசு, ரயில்வே துறையைக் கூறுபோட்டுத் தனியாரிடம் ஒப்படைக்கும் பணியை ‘தேஜஸ்’ வேகத்தில் செய்துகொண்டிருக்கிறது.

இந்திய மக்களின் முக்கியமான பொதுப் போக்குவரத்தாக விளங்கிவருகிறது இந்திய ரயில்வே. தினமும் சுமார் இரண்டரைக் கோடி மக்கள் இந்திய ரயில்களில் பயணம் செய்கிறார்கள். சுமார் 13 லட்சம் ஊழியர்களைக் கொண்டிருக்கிற இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய அரசுத்துறை. இதைத் தனியாருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று நீண்டகாலமாகச் சிலர் சொல்லிவருகிறார்கள். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பும் ரயில்வேயில் முதலீடு செய்ய தனியார் முன்வரவில்லை என்பதுமே அதற்குக் காரணம்.