ஒரு கோடிக்கும் குறைவாகவே வரி வருவாய்..! நகராட்சி முதன்மைச் செயலர் வருத்தம்.

ஒரு கோடிக்கும் குறைவாகவே வரி வருவாய்..! நகராட்சி முதன்மைச் செயலர் வருத்தம்.

Published:Updated:
ஒரு கோடிக்கும் குறைவாகவே வரி வருவாய்..! நகராட்சி முதன்மைச் செயலர் வருத்தம்.
ஒரு கோடிக்கும் குறைவாகவே வரி வருவாய்..! நகராட்சி முதன்மைச் செயலர் வருத்தம்.
0Comments
Share

ராமேஸ்வரம் நகராட்சி வளர்ச்சிப் பணிக்கு ஆண்டு தோறும் 10 கோடி ரூபாய் வழங்கி வரும் நிலையில் நகராட்சி வரி வருவாய் ஒரு கோடிக்கும் குறைவாகவே உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் கூறினார்.

தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் ராமேஸ்வரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''தொன்மை வாய்ந்த புனிதத் தலமான ராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் நலனுக்காக மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைப்புடன் கடலோரப் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அம்ரூட் திட்டங்களின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்னி தீர்த்தக் கடற்கரைப் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் நிறுவுதல், கழிப்பறை வசதியுடன் கூடிய வாகன நிறுத்தம், தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் சேகரிப்பு கலன்கள் அமைத்தல், துணி மாற்றும் அறைகள், அனுகு சாலை வசதி, பேட்டரி கார்கள் வசதி உள்ளிட்ட பணிகளுக்காக 943 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன. மேலும் அம்ரூட் திட்டத்தின் கீழ் 150 லட்ச ரூபாய் செலவில் 3 பசுமை பூங்காக்களும், 2017-20 நிதியின் கீழ் 232 லட்ச ரூபாய் செலவில் மேலும் ஒரு பூங்கா அமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ராமேஸ்வரம் நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு என ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. ஊழியர்களின் சம்பளத்திற்கு ஆண்டுக்கு 2 கோடி வரை செலவிடப்படுகிறது. ஆனால் வரிகள் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வருவாய் ஈட்டப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சியின் வருவாயினை உயர்த்த வீட்டு மற்றும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாதது'' என்றார்.
முதன்மைச் செயலாளருடன் மாவட்ட ஆட்சியர் நடராஜன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஜானகி,மண்டல செயற்பொறியாளர் சச்சிதானந்தம், நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், துணை வட்டாட்சியர் அப்துல்ஜபார் ஆகியோர் உடனிருந்தனர்.