ஜாக்கிரதை! இந்த 10 குணங்கள் இருந்தால் அப்ரைசலில் ஆப்புதான்!

ஜாக்கிரதை! இந்த 10 குணங்கள் இருந்தால் அப்ரைசலில் ஆப்புதான்!

Published:Updated:
ஜாக்கிரதை! இந்த 10 குணங்கள் இருந்தால் அப்ரைசலில் ஆப்புதான்!
ஜாக்கிரதை! இந்த 10 குணங்கள் இருந்தால் அப்ரைசலில் ஆப்புதான்!
0Comments
Share

உலகம் நவீனமாகிவிட்டது. நவீனத் தொலை தொடர்புகள் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே கிராமமாக மாற்றிவிட்டது. புதிய புதிய வேலை வாய்ப்புகளும் பெருகிவிட்டன. ஏற்கனவே இருந்த வேலைகளும் நவீனமாகிவிட்டது. இந்தச் சூழலில் பணியாளர்களின் குணங்கள் கொண்டே மதிப்பிடும் முறைகளும் நவீன அலுவலகங்களில் வந்துவிட்டது.  நீங்க எந்த ஒரு கார்ப்பரேட்டில் வேலை செய்தாலும் சரி, கீழ்க்காணும் 10 கேரக்டர்களில் ஒன்றிரண்டு இருந்தால்கூட மாற்றிக்கொள்ளுங்கள். அப்படி இருந்தால் என்னதான் உழைத்தாலும்  அதற்கு எந்தப் பலனும் இருக்காது.  இந்தக் கட்டுரையை ஒரு அலர்ட்டாக எடுத்துக்கொண்டு உங்களை மாற்றிக்கொள்ள முனைந்தால் அது உங்கள் அப்ரைசரில் ரிசல்ட் கொடுக்கும். 

கம்ப்ளைண்ட் பார்ட்டி  - எதற்கெடுத்தாலும் எதைப்பற்றியாவது புகார் சொல்லியபடி இருப்பது. "ஏன்யா வேலை செய்யவில்லை"என்று கேட்டால்  "சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சு", "கீபோர்ட் வொர்க் ஆகலை" என விதவிதமான புகார்களை சொல்லிச் சமாளிப்பது. இந்த கேரக்டர்களை அதிகாரிகள் கண்டிப்பாக வெறுக்கவே செய்வார்கள். 

ஸாரி சார் பார்ட்டிகள் -  இவர்கள் எதற்கு எடுத்தாலும் எக்ஸ்க்யூஸ் கேட்டபடியே இருப்பார்கள். அன்றைக்கு முடிக்க வேண்டிய எந்த வேலையும் முடிக்காமல் சங்கடமே படாமல் ஸாரி கேட்டபடியே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் இவர்களின் ஸாரிக்கு எந்த மதிப்புமே இல்லாமல் போய்விடும். 

கொட்டாவி பார்ட்டி - ஒரு புது ப்ராஜெக்ட் பற்றி தொண்டைத்தண்ணி போக உங்கள் உயர் அதிகாரி விளக்கிக்கொண்டிருப்பார். சுவாரஸ்யமே இல்லாமல் "ஏன் தலையெழுத்து இந்தக் கரகாட்ட கோஷ்டிகிட்ட மாட்டிகிட்டேன்" என்பதைப்போல ரெஸ்பான்ஸ் கொடுப்பார்கள். எப்படா உங்களைக் கழட்டி விடலாம் என டீம் ஹெட் சீரியசா யோசிக்க ஆரம்பித்துவிடுவார். 

"போவியா அங்கிட்டு" பார்ட்டி - "சார், ஆபிஸ் வேலையா வெளியே வந்திருக்கிறேன். என் சிஸ்டத்தை லாக்-இன் பண்ணி டெஸ்க்டாப்பில் ஒரு பைல் இருக்கும். அதை டீம் லீடருக்கு மெயில் அனுப்பிடுறீங்களா?" என்று உங்கள் கொலிக் அலுவலக வேலையாகக் கேட்கும் உதவியைக்கூடச் செய்யமாட்டீர்கள். ஆனால் அந்த நேரத்தில் ‘ஹாட்ஸ்டாரில் 'மாப்பிள்ளை' சீரியல் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். இவ்வளவு ஏன் உங்கள் கொலிக் பைக்கில் சைடு ஸ்டாண்ட் எடுத்துவிடாமல் போனால் கூடக் கண்டு கொள்ள மாட்டீர்கள். இது உடனடியாக மாற்றவேண்டிய குணம். 

ஹஸ்கி பார்ட்டி - டீம் ஸ்பிரிட் என்பதை உடைப்பதே இந்த கிசுகிசு குணம்தான். இப்படி கிசுகிசுப்பவர்கள் எல்லோரைப்பற்றியும் இன்னொருவரிடம் சொல்லுவார்கள் என்பதே உண்மை. அலுவலகத்தின் பொது நோக்கையும், உற்பத்தித் திறனையும் சிதைப்பதில் கிசுகிசுபார்ட்டிகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்றே சொல்லலாம். மனரீதியான தனிக்குழுக்கள் உருவாக இந்த ஹஸ்கி பார்ட்டிகளே காரணம். 

அள்ளி விட்டான் பார்ட்டிகள் - இவர்கள் மேலுள்ளவர்களை விட டேஞ்சரஸ் கைஸ். அலுவலகத்திற்குள்  எந்தக்காரணத்துக்காகவும் பொய் சொல்லுவது என்பது அதற்குச் செய்யும் துரோகம். இவர்களின் பொய்யின் காரணமாக நிறுவனம் க்ளைன்டை இழக்க நேரிடலாம்.வர்த்தகம் பாதிக்கப்படலாம். 

"லோன்லி ராஜா" பார்ட்டிகள் - இவர்கள் மிகவும் தந்திரமானவர்கள். தாம் என்ன வேலை செய்கிறோம் என உடன் வேலை செய்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள். தமக்குத் தோதான வேலையை எடுத்துக்கொள்வார்கள். காரணம் அதில்தான் பிறரின் உதவித் தேவைப்படாது. உயர் அதிகாரி இரண்டு பேராக சேர்ந்து செய்யச் சொல்லும் வேலையைக்கூடத் தனியாகவே செய்வார். இது அவர்களை அறியாமலே டீமையும் அதன் திறனையும் பாதிக்கும். 

தலையாட்டி பார்ட்டிகள் - அபத்தமான பணியாளர்களாக இருப்பார்கள்.  இவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று தலையாட்டியபடியே இருப்பார்கள். தெரியாதைக்கூட தெரிந்ததைப்போலக் காட்டி கடைசியில் சொதப்பி வைப்பது இவர்களின் கைவந்த கலை. டீம் கொலிக்குகள் தொடங்கி அனைவருக்கும் இவர்களால் தொல்லைதான். 

"எனக்கென்ன" பார்ட்டிகள் - நேரத்துக்கு வேலைக்கு வரமாட்டார்கள். சொல்லிய டெட் லைனை சொதப்பி வைப்பார்கள். எல்லாவற்றுக்கும் எக்ஸ்க்யூஸ் கேட்டே உயிரை வாங்குவார்கள் இவர்கள். ஒரு கட்டத்துக்கு மேல் இவர்களின் குணம் ஆப்பிசருக்கு தெரிவந்துவிடும். அப்புறமென்ன ஆப்புதான். 

ஜிப் வாய் பார்ட்டிகள் - எவ்வளவு பெரிய புது மேட்டர் சொன்னால் கூட அதில் எந்தச் சந்தேகமும் கேட்கமாட்டார்கள். அதில் இண்ட்ரெஸ்ட் இருந்தால்தானே கேள்வி கேட்பதற்கு. கேள்வியும் கேட்கமாட்டார்கள் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ளமாட்டார்கள். 

இதை எழுதும் எனக்கே சில பார்ட்டிகளின் குணம் இருக்கு!  உடனடியாக மாத்திக்கனும் என நினைத்துள்ளேன். உங்களிடமும் இருந்தால் மாற்றிக்கொள்ள முயலுங்கள். ரிசல்ட் அப்ரைசரில் தெரியும்!