வடதமிழகத்தில் நடந்தால் மவுனம்.. தென்தமிழகம் என்றால் போர்க்கொடி.. சாதி பார்த்து கொடி பிடிக்கும் திமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் தாலுகாவில் அமைந்துள்ள மூங்கில்பாடி கிராமத்தை சார்ந்தவர் பெரியசாமி. இவரது மகனின் பெயர் சக்திவேல். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி இரவு நேரத்தில் மின் தடையை ஏற்படுத்திய காவல் துறை அதிகாரிகளான சின்னசேலம் காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் மூன்று காவல் துறையினர் மப்டி சீருடையில் சென்று சக்திவேலை வீட்டை விட்டு வெளியே அழைத்துவந்து அடித்து உதைத்துள்ளார். 

மேலும், மதுபோதையில் இருந்த காவல்துறை அதிகாரி சுதாகர், சக்திவேலை கொலை வெறியுடன் அடித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். சக்திவேல் தனது முகநூலில் பதிவு செய்த விஷயம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் காவல் துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. மேலும், அங்குள்ள உள்ளூர் இளைஞர்களை காவல் துறையினர் அனாவசியமாக ஒருதரப்பு கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டு தாக்கி வருவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர். காவல் துறையினர் சக்திவேலை அழைத்து சென்ற சிறிது நேரத்திலேயே மின்சாரம் கிராமம் முழுவதும் விநியோகம் செய்யப்ட்டுள்ளதாகவும், மின்மாற்றிகளுக்கு அருகேயே காவல் துறையினர் இருந்ததாகவும் மக்கள் கூறியுள்ளனர். 

இரவு முழுவதும் சக்திவேலை காவல் துறையினர் அடித்து உதைத்து பின்னர் காலையில் அனுப்பி வைத்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். இளைஞர் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் கண்டனத்தை பெற்று வந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததை அடுத்து, காவல் அதிகாரி சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. 

இந்த விஷயத்தில், காவல் துறை அதிகாரி சுதாகர் மற்றொரு காவல் நிலையத்திற்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு சார்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், மரியாதையாக முகநூலில் தனிப்பட்ட கருத்தை எந்த விதமான அவதூறு வார்த்தைகள் இல்லாமல் எழுதியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த விஷயத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி சக்திவேலிற்கு ஆதரவாக இருந்து, அவரை மீட்டு கொண்டு வந்த நிலையில், காவல் துறை அதிகாரி சுதாகருக்கு பிற கட்சிகள் எந்த விதமான கண்டனும் தெரிவிக்கவில்லை. மேலும், கடந்த சில வருடத்திற்கு முன்னதாக காவல் துறை அதிகாரிகளின் வாகன சோதனை பணியில் கர்ப்பிணி பெண்ணொருவரும் பலியானார். 

இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தில் சமூக நீதிக்கான கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் திமுக தரப்பில் எந்த விதமான கண்டனமும் இல்லை. ஏனெனில் சேலத்தில் பட்டவரின் சமூகத்தினை பார்த்து திமுக பின்வாங்கியது. திமுகவிற்கு வடமாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களின் வாக்குகளை பெரும் நோக்கில் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர் வன்னியராக இருந்தால் இந்த விஷயம் மட்டுமல்லாது எந்த விஷயத்திலும் சிறிய அளவிலான கண்டனம் மற்றும் அறிக்கை கூட வெளியிடுவதில்லை. 

தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளத்தில் தந்தை, மகன் பலியான விவகாரத்தில் விரைவாக செயல்பட்டு, நீதியை நாங்கள் பெற்று தருகிறோம் என்று பல கண்டனங்கள் வெளியிட்டு வரும் நிலையில், சமூக நீதிக்கான கட்சியாக இருந்தால் அணைத்து தரப்பிலும் நீதிக்காக செயல்பட வேண்டும். மாற்றாக சாதி பார்த்து கண்டனமும், அறிக்கையும் வெளியிட்டுவிட்டு நாங்கள் சமத்துவத்திற்கான கட்சி என்று விளம்பரம் மட்டும் திமுக செய்து வருகிறது. மேற்கூறிய சேலம் சக்திவேல் தாக்கப்பட்ட விவகாரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தாலும் திமுக மவுனம் தான் காத்திருக்கும். 

கடலூர் ஒருதலை காதலால் மாணவி கொலை ...

ஏனெனில் திமுக பல விஷயங்களில் பாதிப்பட்டவர்கள் வடமாவட்டத்தில் பெரும்பான்மை சமூகமாக இருந்தால் எந்த விதமான கண்டனமும் தெரிவித்தது இல்லை. ஏன் கடலூர் கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதியின் கொடூரமாக கொலை, விழுப்புரம் நவீனா என்று பல கொடூர கொலைகள் அரங்கேறிய போதிலும், திமுக எந்த விதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி போன்ற பல விவகாரத்தில் திமுக அரசியல் மட்டுமே செய்து வருகிறதே தவிர, நீதியை பெற எங்கும் பாடுபடவில்லை என்று சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்துவுக்கு ஒரு நீதி?.. கிருத்துவருக்கு ஒரு நீதியா?.. திமுகவை தொடர்ந்து அதிமுகவும் சாதி மத அரசியல்?..!! 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Open Politics Play with Caste


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->