‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்!’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு

‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்!’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு

Published:Updated:
‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்!’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்!’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
0Comments
Share

ரஜினி பிறந்தநாளையொட்டி, வேலூர் கோட்டையில் அவரின் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் சுமார் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ரஜினி பிறந்த நாளையொட்டி, கடந்த 11-ம் தேதி வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மகா ருத்திர யாகம் நடைபெற்றது. பிறந்த நாளான 12-ம் தேதி காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரஜினியின் அண்ணன் சத்ய நாராயண ராவ், மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.ரவி உட்படப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ‘ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒரு நாளோடு நிறுத்திக் கொள்வார்கள்’ என்று நினைத்தவர்களுக்கு மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து ‘ஷாக்’ கொடுத்து வருகின்றனர்.

ரஜினிக்கான வேண்டுதலை நிறைவேற்றுவதாகக் கூறி 11-ம் தேதி முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இன்று காலை வேலூர் கோட்டையில் திடீரென குவிந்த ரசிகர்கள், ‘ரஜினியின் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெற வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு மன்ற செயலாளர் ரவி தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

ரஜினி ரசிகர்களின் ஆரவாரத்தால் இன்று வேலூர் கோட்டை பரபரப்பாகக் காணப்பட்டது.