26 அடி ஆழத்தில் கடலுக்குள் அருங்காட்சியகம்! - புதுச்சேரி அரசின் சுற்றுலா பிளான்

26 அடி ஆழத்தில் கடலுக்குள் அருங்காட்சியகம்! - புதுச்சேரி அரசின் சுற்றுலா பிளான்

Published:Updated:
26 அடி ஆழத்தில் கடலுக்குள் அருங்காட்சியகம்! - புதுச்சேரி அரசின் சுற்றுலா பிளான்
26 அடி ஆழத்தில் கடலுக்குள் அருங்காட்சியகம்! - புதுச்சேரி அரசின் சுற்றுலா பிளான்
0Comments
Share

26 அடி ஆழத்தில் கடலுக்குள் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளை புதுச்சேரி அரசு தொடங்கியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை பெரிய அளவிலான தொழிற்சாலைகளோ, இயற்கை வளங்களோ இல்லை. மாநில வருவாயில் பெரும்பகுதி வகிப்பது சுற்றுலா மூலமே கிடைக்கிறது என்பதால், அதை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பழைய துறைமுக பாலத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் 26.2 அடி ஆழத்தில் கடலுக்குள் பல்நோக்கு மீன் திரட்சி கருவி மற்றும் நீரடி கடல் சார்ந்த அருங்காட்சியகத்தை சுற்றுலாத்துறையின் மூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுகுறித்துப் பேசிய புதுச்சேரி மீன் வளத்துறை இயக்குநர் முனுசாமி, ``இந்தியக் கப்பற்படையில் பயன்பாடற்று விடப்பட்ட `ஐ.என்.எஸ் கடலூர்' என்ற கப்பலை இயந்திரங்கள், உதிரிபாகங்களை முழுமையாக நீக்கிவிட்டு கடலுக்கு நிறுவப்பட இருக்கிறது.

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவாறு நிறுவப்பட இருக்கும் இந்தக் கப்பல் 61.3 மீட்டர் நீளமும், 10.2 மீட்டர் அகலமும், 11.98 மீட்டர் உயரமும் உடையது. இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட இருக்கும் பகுதியில் கடல்வாழ் பல்லுயிர் பெருக்கம் ஏற்படுவதோடு மீன் பெருக்கமும், மீன் பிடிப்பும் அதிகரிக்கும். இந்த நீரடி அருங்காட்சியகத்தைக் காண புதுச்சேரிக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். கடலுக்குள் இருக்கும் கப்பலைக் காண கடலுக்குள் செல்லும்போது டால்பின், திமிங்கிலம் மற்றும் கடல் சார்ந்த பறவைகளைக் கண்டுகளிக்கலாம். ஆழ்கடல் நீச்சலும் மேற்கொள்ளலாம். இந்தத் திட்ட வரைவில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அனைத்து தர மீன் வள பங்குதாரர்கள் டிசம்பர் 15 மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். www.py.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்” என்றார்.