"காவல்துறையினர் ஆளுங்கட்சி நிர்வாகிபோல் செயல்படுகின்றனர்!" - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

"காவல்துறையினர் ஆளுங்கட்சி நிர்வாகிபோல் செயல்படுகின்றனர்!" - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

Published:Updated:
"காவல்துறையினர் ஆளுங்கட்சி நிர்வாகிபோல் செயல்படுகின்றனர்!" - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
"காவல்துறையினர் ஆளுங்கட்சி நிர்வாகிபோல் செயல்படுகின்றனர்!" - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
0Comments
Share

  "அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஆளுங்கட்சி நிர்வாகிபோல செயல்படுகின்றனர்" என்று தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.      

"காவல்துறையினர் ஆளுங்கட்சி நிர்வாகிபோல் செயல்படுகின்றனர்!" - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், காவல்துறை திருச்சி மண்டல துணைத் தலைவர் லலிதா லட்சுமி ஆய்வு மேற்கொள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தபோது, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி அவரிடம் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வரிசையாக நின்று, அமைதியாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், வாக்குச்சாவடி மையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தேர்தல் பணிமனைகளை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் அகற்றி வருவதாக தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி திருச்சி மண்டல துணைத் தலைவர் லலிதா லட்சுமி முறையீடு செய்தார்.

"காவல்துறையினர் ஆளுங்கட்சி நிர்வாகிபோல் செயல்படுகின்றனர்!" - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, "அரவக்குறிச்சி தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ஆளுங் கட்சியின் நிர்வாகிகள் போல செயல்பட்டு வருகின்றனர். வாக்குச்சாவடி மையத்தின் 200 மீட்டர் தொலைவில் தற்காலிக பந்தல் அமைத்து, கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் இல்லாமல், தேர்தல் பணியாற்றலாம் என்ற விதிமுறையை ஆளுங்கட்சியினர் மீறி, தலைவர்களின் புகைப்படங்களை பெரிதாக அச்சிட்டு வைத்துள்ளனர். ஆனால், சட்டத்துக்கு உட்பட்டு தி.மு.கவினர் அமைத்துள்ள உதயசூரியன் சின்னம் பொருந்திய பேனர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர்.

"காவல்துறையினர் ஆளுங்கட்சி நிர்வாகிபோல் செயல்படுகின்றனர்!" - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

தற்பொழுது இங்கு வருகை தந்த காவல்துறை திருச்சி மண்டல துணைத் தலைவர் அவர்களிடம்  விதிமுறையை காட்டி பேசினேன். இதுகுறித்து, தி.மு.க தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். நிச்சயம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க மாபெரும் வெற்றி அடையும். மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பார்" என்றார்.