‘காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயார்..ஆனால்?’ - நாடாளுமன்ற தேர்தல் குறித்து சினேகன்

‘காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயார்..ஆனால்?’ - நாடாளுமன்ற தேர்தல் குறித்து சினேகன்

Published:Updated:
‘காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயார்..ஆனால்?’ - நாடாளுமன்ற தேர்தல் குறித்து சினேகன்
‘காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயார்..ஆனால்?’ - நாடாளுமன்ற தேர்தல் குறித்து சினேகன்
0Comments
Share

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால், காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி வைக்கத் தயாராக உள்ளதாக, புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சினேகன் தெரிவித்தார். 

‘காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயார்..ஆனால்?’ - நாடாளுமன்ற தேர்தல் குறித்து சினேகன்

புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட சினேகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,  ' வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துப் போட்டியிட மக்கள் நீதி மய்யம் நினைத்தது. ஆனால், நினைத்தது நடைபெறவில்லை. ஆனால், திமுகவை விட்டு காங்கிரஸ் வெளியேறினால், தற்போதும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் தயாராக இருக்கிறது. வரும் தேர்தலில் ஊழல் கட்சியான பா.ஜ.க-வை வேரோடு வீழ்த்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் விருப்பம் மற்றும் நோக்கம்.

 பா.ஜ.க-வோடு காங்கிரஸ் கட்சியை ஒப்பிட்டால், அனைத்திலும் காங்கிரஸ் சிறந்த கட்சி. பா.ஜ.கவைப் போன்று ஊழல் கட்சி கிடையாது. பா.ஜ.க- வை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அடையாளப்படுத்திக் கொள்ளவும் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறியவர் தினகரன். அரசியல் ஆதாயத்திற்காகவே கட்சி தொடங்கியுள்ளார். கட்சி அவருக்கு எந்த பயனையும் தராது" என்றார்.