மதுரையில் விகடன் நடத்தும் கல்வி வேலைவாய்ப்பு கண்காட்சி!

மதுரையில் விகடன் நடத்தும் கல்வி வேலைவாய்ப்பு கண்காட்சி!

Published:Updated:
மதுரையில் விகடன் நடத்தும் கல்வி வேலைவாய்ப்பு கண்காட்சி!
மதுரையில் விகடன் நடத்தும் கல்வி வேலைவாய்ப்பு கண்காட்சி!
0Comments
Share

`என்ன மார்க்ஸ், என்ன கோர்ஸ்' என்ற தலைப்பில் கல்வி வேலைவாய்ப்பு கண்காட்சி மதுரை லெட்சுமி சுந்தரம் ஹாலில் தொடங்கியது.

ஆனந்த விகடன் மற்றும் சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்  இணைந்து நடத்தும் `என்ன மார்க்ஸ் என்ன கோர்ஸ்' என்ற தலைப்பில் `ப்ளஸ் டூ மாணவர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பு கண்காட்சி  நிகழ்ச்சி மதுரையில் தொடங்கியது. இதில் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று நடைபெறும் கருத்தரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன்  `புதிய படிப்புகளும் வாய்ப்புகளும்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். கல்வியியலாளர் நெடுஞ்செழியன் மதிப்பெண்ணுக்கேற்ற படிப்புகள் பற்றியும், கிங் மேக்கர்ஸ் IAS அகாடமியின் மேலாளர் சத்யஸ்ரீ பூமிநாதன், கல்லூரி படிக்கும்போதே IAS தேர்வுக்குத் தயாராவது குறித்தும் வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். உளவியல் வல்லுநர் தீப் கல்லூரி படிப்பை எளிமையாக முடிப்பதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

இக்கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் இன்றும் தொடர்ந்து நாளையும் நடைபெறுகிறது.