`தொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ - அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி!

`தொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ - அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி!

Published:Updated:
`தொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ - அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி!
`தொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ - அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி!
0Comments
Share

காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு, வரும் ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், எம்.பி பதவியைக் குறிவைத்து தி.மு.க., அ.தி.மு.க-வில் போட்டி உச்சத்தை எட்டியுள்ளது.

`தொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ - அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி!

ஆறு மாநிலங்களவை இடங்களில், எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுக்கும் தலா மூன்று எம்.பி இடங்கள் கிடைக்க உள்ளன. தி.மு.க-வில் ம.தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வில் பா.ம.க-வுக்கும் ஏற்கெனவே தலா ஒரு எம்.பி சீட் உறுதியளிக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள நான்கு இடங்களுக்கு போட்டி கடுமையாகியுள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதிக்காக, தனது இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை சமீபத்தில் வெள்ளக்கோயில் சாமிநாதன் ராஜினாமா செய்தார். இதற்குப் பிரதிபலனாக, அவருக்கு மாநிலங்களவை எம்.பி பதவி அளிக்கப்படும் என தி.மு.க வட்டாரங்களில் செய்தி பரவியது. இந்நிலையில், தி.மு.க தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் நடத்திவரும் மூத்த வழக்கறிஞர் வில்சன், தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சண்முகம் ஆகியோருக்கு பதவி அளிக்கலாம் என ஸ்டாலின் கருதுகிறாராம். வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு பதவியளித்தால், உதயநிதிக்காகத்தான் இப்பதவி அளிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழும் என ஸ்டாலின் கருதுவதாகக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க-வில், மீண்டும் மாநிலங்களவை எம்.பி-யாக பத்திரிகையாளர் ரபி பெர்னாட் நீண்ட முயற்சியை மேற்கொண்டுவந்தார். இதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பையும் வைத்திருந்தார். அவரை எம்.பி-யாக்குவதால் யாருக்கு என்ன லாபம் என சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், முதல்வரின் மனத்திலும் தயக்கம் பிறந்துள்ளதாம். தர்மயுத்தக் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் இருந்த நத்தம் விஸ்வநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள். இவர்கள் போக, அ.ம.மு.க-வின் தங்க.தமிழ்ச்செல்வனும் (அ.தி.மு.க-வில் இணையும் பட்சத்தில்) எம்.பி பொறுப்பை எதிர்பார்க்கிறாராம். இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை என்கிறார்கள். ஜூலை 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்பதால், அதற்குள்ளாக ஐந்து நாள்களில் வேட்பாளர் தேர்வை இரு கட்சிகளும் முடித்துவிடும் எனத் தெரிகிறது.