நிர்மலாதேவி வீட்டுக்கு 'சீல்' வைத்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ்!

நிர்மலாதேவி வீட்டுக்கு 'சீல்' வைத்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ்!

Published:Updated:
நிர்மலாதேவி வீட்டுக்கு 'சீல்' வைத்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ்!
நிர்மலாதேவி வீட்டுக்கு 'சீல்' வைத்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ்!
0Comments
Share

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்குச்  சீல் வைத்தது சிபிசிஐடி போலீஸ்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்ல ஆசை வார்த்தை காட்டிய பேராசிரியை நிர்மலாதேவி கடந்த 17 -ம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து அவரை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்களைக்  கண்டுபிடிக்கும் வகையில் அருப்புக்கோட்டையின் புறநகர் பகுதியான ஆத்திப்பட்டியில் இருக்கும் நிர்மலாதேவி வீட்டில் சி.பி.சி.ஐ.டி. தொடர்ந்து மூன்று மணி நேரம் நடத்திய சோதனையில் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர், சிபியூ மற்றும் பென் டிரைவ் போன்றவற்றைக்  கைப்பற்றியுள்ளனர். இந்தச்  சோதனையின்போது ஆத்திபட்டி கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உடன் இருந்தார். 5 மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வீட்டிற்குச்  சீல் வைத்தது சி.பி.சி.ஐ.டி.போலிஸ். அதே நேரம் இன்று மதியம் முதல் காமராசர் பல்கலைக்கழகத்தில் விசாரணைக்  குழு அதிகாரி சந்தானம் நடத்திய விசாரணையில்,  பல்கலைக்கழக  ஆசிரியர்கள், அலுவலர்கள் சாட்சியம் அளித்தனர். பல்கலைக்கழகத்துக்கும் நிர்மலாதேவிக்கும் சம்பந்தமில்லை, பல்கலைக்கழக பெயரை கெடுக்கப்  பார்க்கிறார்கள் என்று ஒரே டோனில் கூறியுள்ளார்கள்.

தேர்வுத்துறை தலைவர் ராஜராஜன்,  நிர்மலாதேவி பேப்பர் வேல்யூசன் செய்ய வந்த  தகவலை ஆதாரத்துடன் கூறியுள்ளார். இதன் மூலம் நிர்மலாதேவிக்கும் பல்கலைக்கழகத்துக்கும் உள்ள தொடர்பு உறுதியாகியுள்ளது. அதனால், பல்கலைக்கழகத்தில் விசாரணை மீண்டும் தொடரும் என்று கூறியுள்ளார் விசாரணை அதிகாரி சந்தானம். இதனால் நிர்மலாதேவி வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.