54-வது ஞானபீட விருது ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

54-வது ஞானபீட விருது ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

Published:Updated:
54-வது ஞானபீட விருது ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
54-வது ஞானபீட விருது ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
0Comments
Share

இந்தியாவில், இலக்கியத்திற்காகக் கொடுக்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீட விருது,  இந்த ஆண்டு ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு இந்த விருதை பாரதிய ஞானபீட பண்பாட்டு இலக்கியக் கழகம் வழங்கிவருகிறது.

54-வது ஞானபீட விருது ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 54-வது ஞானபீட விருது, அமிதவ் கோஷின் இலக்கியப் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. “அமிதவ் கோஷின் புனைகதைகள் அனைத்தும் ஆழமான பொருளைக் கொண்டவை. மேலும், அவர் சிறந்த வரலாற்றுப் பேராசிரியராகவும் சமூக மானுடவியல் ஆய்வாளராகவும் செயல்பட்டுவருகிறார்” என பாரதிய ஞானபீட அமைப்பு விருதை அறிவிக்கும்போது, கோஷ் பற்றிக் கூறியுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுத் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தவர், ஞானபீட விருது பெற்ற ப்ரதீப ராய் ஆவார்.

அமிதவ் கோஷ், மிக முக்கியமான சமகால எழுத்தாளர். இவரது Shadow Lines, The Glass Palace, The Hungry Tide and Ibis Trilogy — Sea of Poppies, River of Smoke, and Flood of Fire — chronicling the Opium trade between India and China run by the East India Company  ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

54-வது ஞானபீட விருது ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

“எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இதைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கோஷ்.

அமிதவ் கோஷ், 1956-ல் கொல்கத்தாவில் பிறந்தவர். தற்போது, மனைவியுடன் நியூயார்கில் வசித்துவருகிறார். தன்னுடைய இளமைக்காலங்களில் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளில் கழித்தார். டெல்லி, ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் அலெக்ஸாண்டிரியா ஆகிய ஊர்களில் கல்வியைக் கற்றுள்ளார்.

இவரது சமீத்திய கட்டுரைத் தொகுப்பு The Great Derangement; Climate Change and the Unthinkable 2016ல் வெளியானது.

அமிதவ் கோஷ், பத்ம ஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார்.

இந்த விருது, இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படும். விருதுடன் சேர்த்து 11 லட்ச ரூபாயும், தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன சரஸ்வதி சிலையும் வழங்கப்படும்.

தமிழில், அகிலனும் ஜெயகாந்தனும் ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர்கள் ஆவர்.