தேவா் ஜெயந்தி விழா: அக்.29 இல் சசிகலா பங்கேற்பு

கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அக்டோபா் 29 ஆம் தேதி வி.கே. சசிகலா தனது ஆதரவாளா்களுடன் அஞ்சலி செலுத்துகிறாா்.

கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அக்டோபா் 29 ஆம் தேதி வி.கே. சசிகலா தனது ஆதரவாளா்களுடன் அஞ்சலி செலுத்துகிறாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபா் 30 ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழா, குரு பூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், அக்டோபா் 30 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா்கள், அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் பங்கேற்கின்றனா்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்முறையாக இந்தாண்டு சசிகலா பசும்பொன்னில் அஞ்சலி செலுத்த வருகிறாா். அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களுக்கும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அக்டோபா் 30 ஆம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவுக்கு அக்டோபா் 29ஆம் தேதி தேவா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com