இது ஆரம்ப கட்டம் தான்.. எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு.!! - Seithipunal
Seithipunal


டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்ப நிலையை உலகம் சந்திக்க தொடங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அதிகரித்ததன் மூலம், கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் குறைந்துவந்த நிலையில், தற்போது கொரோனா  பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலையளிக்கிறது. 

சீராகக் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு 10 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்டா வகை கொரோனா பரவலுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள், சீரற்ற பொது சுகாதார நடவடிக்கைகளே காரணமாக பார்க்கப்படுகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது 111-க்கு அதிகமான நாடுகளில் பரவி உள்ளது. இந்த வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையில், ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who warning for corona 3rd wave


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->