புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திருப்பூர் அறிவியல் இயக்கம் மனு

புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் மக்களவையில் கேள்வி எழுப்பக்கோரி மனு அளித்தனர். 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் மனு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் மனு

புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் மக்களவையில் கேள்வி எழுப்பக்கோரி மனு அளித்தனர். 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதிப்புகள் குறித்தும், கல்வி மாநிலப் பட்டியலில் கொண்டு வரவேண்டியும் மக்களவையில் கேள்வி எழுப்பக் கோரி திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்புராயனிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள மக்களவை உறுப்பினர்களை நேரில் சந்தித்து, புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதிப்புகள் குறித்தும், கல்வி மாநிலப் பட்டியலில் கொண்டு வரவேண்டியும் மக்களவையில் கேள்வி எழுப்பக் கோரி மனு அளிக்கப்பட்டு வருகின்றது.

இதையடுத்து, திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், திருப்பூர் மாவட்டச் செயலர் கி.தினேஷ் குமார் தலைமையில், மாநிலச் செயலர் வி.ராமமூர்த்தி, மாவட்ட முன்னாள் தலைவர் ஆ.ஈசுவரன் மற்றும் கல்வி உப குழு உறுப்பினர்கள் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்புராயனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்டு சுப்புராயன்  கூறுகையில்,

இது விவாதிக்கப்பட வேண்டிய விசயம் அல்ல, புறக்கணிக்கப்பட வேண்டிய விசயம், கட்டாயம் மக்களவையில் குரல் எழுப்புவதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com