Thursday, May 30, 2024

காவல்துறையினருக்கு வார விடுப்பு?? தமிழக அரசு ஆலோசனை!!

Must Read

தமிழகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக விடுமுறை வழங்க தமிழக அரசு முடிவு செய்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையினை சுழற்சி முறையில் வழங்கலாமா? என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

காவல் பணி:

தமிழகத்தில் காவல் பணி மிகவும் மதிப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் தங்களது குடும்பத்தினரை மறந்து பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் மக்களின் நலனுக்காக இரவு பகலாக வேலை பார்த்தனர். களப்பணியாளர்களுடன் முன்னின்று கொரோனா அச்சம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு சென்றதில் அவர்களுக்கு தனி பங்கு உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

 

இப்படியாக இருக்க காவல்துறையினை சேர்ந்த அதிகாரிகளுக்கு வார விடுப்பு என்பது கிடையாது. மற்ற அரசு துறைகளில் பணிபுரியும் அனைவருக்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். காரணம், தொடர்ச்சியாக ஏற்படும் வேலை பளுவின் காரணமாக பல அதிகாரிகள் மனஉளைச்சலினால் தற்கொலை செய்து கொண்டனர். இதன் காரணமாக வார விடுமுறையினை மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் காவல்துறையினருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் – ஐ.சி.சி அதிகாரப்பூர்வ தகவல்!!

 

இது குறித்து தமிழக சட்ட ஒழுங்கு சிறப்பு அதிகாரி ராஜேஷ்தாஸ் அண்மையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நீண்ட நாட்களாக இந்த கோரிக்கை அனைவர் மத்தியிலும் இருந்து வந்ததால் இது குறித்து தமிழக அரசு விரைவாக முடிவினை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் எதாவது ஒரு நாள் விடுப்பு வழங்க தேர்ந்தெடுக்கப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் வழங்கவும் ஆலோசனை மேற்கொள்ளபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!

சாலை  விதிமுறைகள் எவ்வளவு தான்  கடுமையாக  இருந்தாலும் ஆங்கங்கே  சில விபத்துக்கள்  நடந்த வண்ணம்  தான்  உள்ளது. சமீபத்தில் சிறுவர்கள்  வாகனங்களை  ஒட்டி அதன்  மூலம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -