களுத்துறையில் உயிரிழந்த சிறுமி விற்பனை செய்யப்பட்டாரா? – பொலிஸாரின் புதிய அப்டேட்

1 year ago
Sri Lanka
aivarree.com

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 16 வயதுடைய சிறுமி, சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளாரா என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சிறுமியுடன் விடுதிக்குச் சென்ற 22 வயதான இளைஞன், உயிரிழந்த சிறுமியை சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய யோசனை கூறியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதன்படி, பிரதான சந்தேக நபர் பணத்தின் ஒரு பகுதியை அவரிடம் வழங்கியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் இது தொடர்பான முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் நேற்று (12) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.