ஆசிரியரின் பெயரை எழுதி வைத்துவிட்டு மாணவன் தற்கொலை

1 year ago
Sri Lanka
aivarree.com

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி வைத்துவிட்டு பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவிற்குளம் இந்து கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு தற்கொலை செய்தவர் ஆவார்.

என் மரணத்திற்கு காரணம் வவுனியாவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் என பெயரையும் சுட்டிக்காட்டி எழுதி வைத்திருந்த கடிதமும் மாணவனின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மாணவனின் பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மேலதிக விசாரணைக்காக குறித்த ஆசிரியரிடமும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.