2 கொரிந்தியர் 5:17
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்;
பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.

ஒரு புதிய வாழ்வு

பத்தான பதின் பருவத்தினர் இளைஞர்களின் அறையில் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். வில்லியம் தலை தாழ்த்தி, ஒரு மௌனமான ஜெபத்தை ஏறெடுத்தார். அவர்” நான் சிறையில் இருந்ததை மறப்பதை சிலர் அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் நான் செய்த தவறுகளை மறக்க நான்தான் அனுமதிப்பதில்லை,” என்றார். அவர் வேதத்தை பிடித்தபடி சிரித்தார். ஆனால் தேவன் சொன்னார் அவர் எனக்கு புது வாழ்வை கொடுத்தார். அதே ஈவை உங்களுக்கும் அளிக்கிறார்”. வில்லியமை போன்றே நம்மில் சிலர் மன்னிக்கப்பட்டதாய் உணரவும், மீட்கப்பட்டதாய் ஒத்துக் கொள்ளவும் போராடுகின்றனர். நம் இரட்சகரின் அன்பை விளக்கும் புது சிருஷ்டிகள், முன்பு நம்மை கட்டியிருந்த பாவங்கள் அல்ல. அப்போஸ்தலர் பவுல் தம்மை பிரதான பாவியாக கருதுகிறவர் (1 தீமோத்தேயு 1:12-17) இயேசுவின் விசுவாசிகள் மக்களையும் கிறிஸ்துவையும் “மாம்சத்தின்படி” அறிவதை நிறுத்த வேண்டும் (2 கொரிந்தியர் 5:16). புதிய மக்களாக (அல்லது “புதியச் சிருஷ்டிகள்”) நம் பாவங்களை எண்ணாமல் இயேசுவின் மரணத்தாலும் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டோம் (வசனம் 17-19). இந்தப் புதிய அடையாளத்தை பெற்ற பின், தேவ பிள்ளைகள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாக வாழ்கிறார்கள் (வசனம் 20). நம் பழைய பாவங்கள் நம்மைச் சிறைப்படுத்துவது இல்லைஅல்லது களங்கப்படுத்துவதில்லை.

நாம் தேவனுடைய எப்போதும் போதுமான கிருபைக்கு பதிலாக நம் பற்றாக்குறைகளை கவனித்தால் நம் தேவனை விசுவாசித்து வாழ்வது கடினமாக இருக்கும். ஆனால் அந்த போராட்டத்திலும் தேவனால் நம்மை அழைக்கப்பட்டவர்களாயும் அதிகாரம் உள்ளவர்களாயும் இயேசுவுக்காக வாழ்பவர்களாய் மீட்கப்பட்டவர்களாய் காண தேவனால் நமக்கு உதவி செய்ய முடியும்- நாம் அவர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை மற்றவர்களுக்கும் சுட்டிக்காட்ட முடியும்.

சோச்சில் டிக்ஸன்

எப்பொழுது யாரேனும் உம்மையும் சேர்த்து உங்கள் முந்தைய பாவங்களால் நீங்கள் சிக்க வைக்கப் பட்டுள்ளீர்கள் அல்லது களங்க பட்டுள்ளீர்கள் என்று நம்ப வைத்து உள்ளார்கள்? உங்கள் பாவத்திற்காக இயேசுவின் பலி மற்றும் அவர் வழங்கும் மன்னிப்பும் உங்கள் எதிர்காலத்திற்கு நம்பிக்கையை எவ்வாறு அளிக்கிறது ?

வல்லமையான இயேசுவே நீங்கள் கொடுத்த புதிய வாழ்வை உண்மையிலேயே பெற்றுக் கொண்டதால் நான் வாழவும் உம்மேல் விசுவாசத்தை வைக்கும் மற்றவர்களும் புது வாழ்வை ஏற்க ஊக்கப்படுத்தவும் எனக்கு உதவும்.

இன்றைய வேத பகுதி | 2 கொரிந்தியர் 5:11- 21

11 ஆகையால் கர்த்தருக்கு பயப்பட தக்கது என்று அறிந்து மனுஷருக்கு புத்தி சொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியிடங்களில் இருக்கிறோம்; உங்கள் மனசாட்சிக்கும் வெளியரங்கமாய் இருக்கிறோம் என்று நம்புகிறேன்.

12 இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக் கொள்ளாமல் இதயத்தில் அல்ல வெளி வேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மை பாராட்டும்படிக்கு ஏது உண்டாக்குகிறோம்.

13 நாங்கள் பைத்தியம் கொண்டவர்கள் என்றால் தேவனுக்காக அப்படி இருக்கும்; தெளிந்த புத்தி உள்ளவர்கள் என்றால் உங்களுக்காக அப்படி இருக்கும்.

14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால் எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க எல்லாரும் மரித்தார்கள் என்றும்;

15 பிழைத்திருக்கிறவர்கள் இனி தங்களுக்கென்று பிழைத்திராமல் தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கு என்று பிழைத்திருக்கும் படி அவர் எல்லாருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம்.

16 ஆகையால் இது முதற்கொண்டு நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும் இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

17 இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின எல்லாம் புதிதாயின.

18 இவையெல்லாம் தேவனால் உண்டாயிருக்கிறது: அவர் இயேசு கிறிஸ்துவை கொண்டு நம்மை தம்மோடே ஒப்புரவாக்கி ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

19 அது என்னவெனில் தேவன் உலகத்தார் உடைய பாவங்களை எண்ணாமல் கிறிஸ்துவுக்குள் அவர்களை தமக்கு ஒப்புரவாகி ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.

20 ஆனபடியினாலே தேவனானவர் எங்களைக் கொண்டு புத்தி சொல்லுகிறது போல நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாய் இருந்து தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் நிமித்தம் உங்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.

21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக பாவம் ஆக்கினார்.

சிலுவை கிறிஸ்துவத்தின் உலகளாவிய அடையாளம்…
ஒரு மரக்கட்டை (பீம்) கிடைமட்டாக, மற்றொன்று செங்குத்தாக…
ஒன்று அவருடைய அன்பின் அகலத்தை குறிக்கிறது; மற்றொன்று
அவருடைய பரிசுத்தத்தின் உயரத்தை விளக்குகிறது. சிலுவை
தான் குறுக்குச் சந்திப்பு… அங்கே தேவன் தம் உயர்ந்த
தரநிலையிலிருந்து தம் பிள்ளைகளை மன்னிக்கிறார்.
மேக்ஸ் லுகேடோ

∼∼∼

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு,
அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச்
சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

1 பேதுரு 2:24

∼∼∼

தம் சிலுவை மரணத்தால், இயேசு நம் தவறுகளை
எல்லாம் தம் மேல் சுமந்து நமக்கு மன்னிப்பை
வழங்கினார். அவர் நம் சுமையை சுமந்ததால், நமக்கு
வரவேண்டிய தண்டனைக்காய் நாம் துன்பப்பட வேண்டியதில்லை.

மார்வின் வில்லியம்ஸ்

∼∼∼

உங்கள் சரித்திரம் எதுவாக இருப்பினும் உங்கள் தற்போதைய சூழல் எதுவாக இருப்பினும் ஒரு வினாடி கூட அன்பானவரை தவிர்க்காதீர்கள். இயேசு, “நீங்கள் யார் என்பது பற்றியோ அல்லது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பது பற்றியோ விஷயம் இல்லை. நான் முழுமையாக மன்னிக்கிறேன்! நான் உங்களை எப்போதும் நேசிக்கிறேன்!” என்று சொல்வதை கேளுங்கள்.
லென் வுட்ஸ்

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான் 1:9

∼∼∼

இயேசு அவரை சிலுவையில் அறைந்த அவர்களை மன்னித்தால், மற்றும் தேவன் என்னையும் உன்னையும் மன்னித்தால், யாரிடம் இருந்தோ வரும் மன்னிப்பை நீங்கள் எவ்வாறு நிறுத்த முடியும்?
ஆனி கிரஹாம் லோட்ஸ்

∼∼∼

பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:15

∼∼∼

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
யோவான் 11:25

 

banner image